Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தரங்க புகைப்படங்களை காட்டி பாலியல் பலாத்காரம்.! இளம் பெண்களை சீரழித்த வாலிபர் கைது..!!

Senthil Velan
திங்கள், 27 மே 2024 (13:12 IST)
கர்நாடக மாநிலத்தில் நிர்வாண புகைப்படங்களை காட்டி இளம் பெண்களை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
 
கர்நாடகா மாநிலம் கார்வாரில் உள்ள ஷிராசியைச் சேர்ந்தவர் அருணா கவுடா மலாலி என்ற அர்ஜுன். இவர் இளம்பெண்களை காதல் வலையில் விழ வைத்துள்ளார். மேலும் அவர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது அதனை புகைப்படங்களாக  எடுத்துள்ளார். 
 
இந்த புகைப்படங்களைக் காட்டி பெண்களை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், அர்ஜுன் மீது ஷிராசி, பனவாசி, குந்தாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிரட்டல், இளம்பெண்களை பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால், அர்ஜூனை கைது செய்ய போலீஸார் சென்றனர்.
 
அப்போது அவர் திடீரென கற்களை வீசித் தாக்கிய போது போலீசார் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். அவருக்கு உறுதுணையாக இருந்த பாலச்சந்திரா, கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் எலி மருந்தை சாப்பிட்டார். உடனடியாக அவரை மீட்ட போலீசார், ஹூப்ளி மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ALSO READ: ஜெயக்குமார் மரண வழக்கில் நீடிக்கும் மர்மம்.! 30-க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன்..!!
 
குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுனுக்கு, அவரது தாய் நாகவேணி, உறவினர் பாலச்சந்திர கவுடா ஆகியோர் உதவியாக இருந்துள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் போராட்டம்.! தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு.!

தமிழகத்தில் மதுவிலக்கை உடனே அமல்படுத்துக.! ராமதாஸ் வலியுறுத்தல்...!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. இன்னும் ஒரு வாரத்தில் என்ன ஆகும்?

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள்: இன்று வெளியாகிறது தரவரிசைப் பட்டியல்..!

அடுத்த கட்டுரையில்