Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் தேர்தல் விளம்பரத்துக்கு விதித்த தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் மறுப்பு

Mahendran
திங்கள், 27 மே 2024 (12:56 IST)
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான  பாஜகவின் தேர்தல் விளம்பரத்துக்கு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் பாஜகவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த உத்தரவில் நீதிபதிகள், ‘பாஜகவின் விளம்பரத்தை பார்த்தோம், அது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அவமதிக்கும் வகையில் உள்ளது. பாஜகவின் விளம்பரம் வாக்காளர்களின் நலன்களுக்கு ஆதரவாக இல்லை என்பதால் கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறி மனுவை தள்ளுபடி நீதிபதிகள் செய்தனர். மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
 
முன்னதாக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் குறித்து அவதூறு செய்யும் வகையில் பாஜக இழிவான விளம்பரங்களை வெளியிட்டதாக அக்கட்சியின் சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எவ்வித இழிவான விளம்பரங்களையும் பாஜக வெளியிட கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments