Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கஞ்சா சாக்லெட் விற்பனை..! ஒடிசா வாலிபர் கைது..!!

arrest

Senthil Velan

, வியாழன், 1 பிப்ரவரி 2024 (10:15 IST)
தாராபுரம் அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து வந்த ஒடிசாவை சேர்ந்த வாலிபர் ஒருவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
 
திருப்பூர் மாவட்டம்  தாராபுரத்தை அடுத்த குடிமங்கலம் அருகே உள்ள பொட்டியம்பாளையம் பகுதியில்  கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள், தாராபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இதை அடுத்து மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
 
அப்போது கஞ்சா சாக்லெட் விற்பனையில் ஈடுபட்ட ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ஜஜாபூர் மாவட்டம் பிங்கர்புன் பகுதியைச் சேர்ந்த தீபா பரத் பாடி (32) என்பவரை கைது செய்தனர்.
 
அவரிடமிருந்து, 3.1/2-கிலோ எடை உள்ள கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் உடுமலை, குடிமங்கலம், தாராபுரம், பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் மட்டைமில், செங்கல்சூளை, நூல்மில், பனியன் கம்பெனி போன்றவற்றில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளர்களுக்கு கஞ்சா சாக்லேட்கள் விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தார்.

 
மேலும் இவருக்கு தொடர்புடைய நபர்களில் யாராவது இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா  என்ற கோணத்தில் போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட ஒடிசா வாலிபரை தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

IRCTC இணையதளத்தில் பண மோசடி..? டிக்கெட் புக் செய்தவர் கணக்கில் ரூ1.8 லட்சம் அபேஸ்! – என்ன நடந்தது?