கர்நாடக மாநிலத்தில் நிர்வாண புகைப்படங்களை காட்டி இளம் பெண்களை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் கார்வாரில் உள்ள ஷிராசியைச் சேர்ந்தவர் அருணா கவுடா மலாலி என்ற அர்ஜுன். இவர் இளம்பெண்களை காதல் வலையில் விழ வைத்துள்ளார். மேலும் அவர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது அதனை புகைப்படங்களாக எடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்களைக் காட்டி பெண்களை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், அர்ஜுன் மீது ஷிராசி, பனவாசி, குந்தாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிரட்டல், இளம்பெண்களை பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால், அர்ஜூனை கைது செய்ய போலீஸார் சென்றனர்.
அப்போது அவர் திடீரென கற்களை வீசித் தாக்கிய போது போலீசார் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். அவருக்கு உறுதுணையாக இருந்த பாலச்சந்திரா, கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் எலி மருந்தை சாப்பிட்டார். உடனடியாக அவரை மீட்ட போலீசார், ஹூப்ளி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுனுக்கு, அவரது தாய் நாகவேணி, உறவினர் பாலச்சந்திர கவுடா ஆகியோர் உதவியாக இருந்துள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.