Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜினாமாவிற்கு முன் எடியூரப்பாவுக்கு 2 நிபந்தனைகளை விதித்த ரமேஷ் ஜார்கிஹோளி !

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (11:20 IST)
ரமேஷ் ஜார்கிஹோளி ராஜினாமா செய்யும் முன்பு, முதல்வர் எடியூரப்பாவுக்கு 2 நிபந்தனைகளை விதித்துள்ளார். 

 
கர்நாடகாவில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் நீர்பாசன துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, இளம் பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவருடன் பல முறை பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக தெரிகிறது.  
 
இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் அடங்கிய சிடியை கர்நாடக மக்கள் உரிமை போராட்ட சங்க தலைவர் தினேஷ் கல்லஹள்ளி, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் காவல் நிலையத்தில் கொடுத்து புகார் அளித்துள்ளார். இந்த செய்தி நேற்று டிவி சேனல்களில் ஒளிப்பரப்பாகி கடும் சர்ச்சைகளை அங்கு எழுப்பியுள்ளது.  
 
மெத்தை மீது அமைச்சரும் அந்த இளம் பெண்ணும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் இருவரின் செல்போன் உரையாடல்கள் ஆகியவை ஆதாரமாக வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய கர்நாடக பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தார். 
 
இவர் ராஜினாமா செய்யும் முன்பு, முதல்வர் எடியூரப்பாவுக்கு 2 நிபந்தனைகளை விதித்துள்ளார். அதாவது தனது ராஜினாமாவிற்கு பிறகு நீர்ப்பாசனத்துறையை வேறு எந்த மந்திரிக்கும் ஒதுக்கக்கூடாது, அதை நீங்களே (எடியூரப்பா) வைத்துக்கொள்ள வேண்டும். 
 
அடுத்த முறை மந்திரிசபை விரிவாக்கம் செய்யும்போது எனது குடும்பத்தை சேர்ந்த சகோதரர் பாலச்சந்திர ஜார்கிகோளிக்கு மந்திரி பதவி வழங்கி நீர்ப்பாசனத்துறையை ஒதுக்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்