Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! – இன்றைய நிலவரம்!

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! – இன்றைய நிலவரம்!
, வியாழன், 4 மார்ச் 2021 (10:26 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 17,407 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,11,56,923 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,57,435 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,08,26,075 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,73,413 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக வேட்பாளர் தேர்வு நேர்காணல் தொடங்கியது!