Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெகாசஸ், பிபிசி ஆவணப்படம், மணிப்பூர்.. பாராளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் வெளியாகும் பிரச்சனைகள்: சதிக்கு பின் யார்?

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2023 (12:40 IST)
ஒவ்வொரு முறையும் பாராளுமன்றம் கூடுவதற்கு முந்தைய நாள் அல்லது பாராளுமன்றம் கூடும் நாள் ஓர் பிரச்சனை வெளியாகி கொண்டிருப்பது ஏன் என பாஜக பிரமுகர்  ராம சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
பெகாசஸ் என்ற டெலிபோன் ஒட்டு கேட்கும் பிரச்சனை பாராளுமன்றம் கூடுவதற்கு முந்தைய நாள் தான் வெளியானது. அதேபோல் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படமும் பாராளுமன்றத்திற்கு கூட்டத்திற்கு முந்தைய நாள் தான் வெளியானது 
 
அதேபோல் தற்போது பாராளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் தான்  மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நேர்ந்த அநியாயம் குறித்து வெளியானது. மே 4ஆம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவத்தை பாராளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் வெளியிட வேண்டிய அவசியம் என்ன? ஏன் இதுவரை அந்த வீடியோ வெளியேறவில்லை?
 
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரே இதுவரை போலீஸில் சென்று ஒரு புகார் கூட கொடுக்காமல் மிகச் சரியாக பாராளுமன்றத்திற்கு முந்தைய நாள் பேட்டியளிப்பது ஏன்? இது குறித்து விசாரிக்க வேண்டும் 
 
இதில் அயல்நாட்டு சதியும் இருக்கிறது, பாராளுமன்றத்தை ஒரு பிரச்சனையின் மூலம் முடக்க வேண்டும் என்ற சதியும் இருக்கிறது என்று ராம சீனிவாசன் தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments