பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணிக்கு தடை விதித்து ஆந்திர மாநில முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் நெரிசல் காரணமாக 8 பேர் உயிரிழந்தனர் என்பதும் இதில் ஒரு பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் இறந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஆந்திராவில் பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணி நடத்த அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தடை விதித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் பேரணி பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தடை அறிவிப்பு எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது