Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீரை மறந்துவிடுங்கள் – பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை !

Advertiesment
காஷ்மீரை மறந்துவிடுங்கள் – பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை !
, திங்கள், 14 அக்டோபர் 2019 (08:48 IST)
காஷ்மீரை மறந்துவிடுங்கள் அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மாநில சட்டப் பேரவைக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக கர்னால் எனும் பகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ‘வளைகுடா நாடுகளில் தீவிரவாத பதற்றத்தைக் குறைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாக பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவுக்கு எதிரான தீவிர வாதிகளை தங்கள் நாட்டில் பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது. உண்மையிலேயே பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒழிக்க விரும்பினால் இந்தியா தன் ராணுவத்தை அனுப்பி வைக்கத் தயாராக உள்ளது.

காஷ்மீர் சுதந்திரம் அடையும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். காஷ்மீரை நீங்கள் மறந்துவிடுங்கள்; அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.  இது தொடர்பாக வேறு எந்த நாடும் எங்களுக்கு அழுத்தமும் தரமுடியாது.’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எழுவர் விடுதலைக்கு சிக்கலை உண்டாக்குமா சீமான் பேச்சு – சமூக வலைதளங்களில் எழும் கண்டனம் !