Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எழுவர் விடுதலைக்கு சிக்கலை உண்டாக்குமா சீமான் பேச்சு – சமூக வலைதளங்களில் எழும் கண்டனம் !

Advertiesment
எழுவர் விடுதலைக்கு சிக்கலை உண்டாக்குமா சீமான் பேச்சு – சமூக வலைதளங்களில் எழும் கண்டனம் !
, திங்கள், 14 அக்டோபர் 2019 (08:32 IST)
விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான் விடுதலைப் புலிகள் பற்றியும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை  குறித்தும் சர்ச்சையானக் கருத்துகளைப் பேசியுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அவர் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அவரது பேச்சில் ‘ஆமாம்... நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்’ என பேசினார்.

சீமானின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் சூழ்நிலையில் கடுமையான அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. சீமானைத் தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் அங்கிகாரததை நீக்க வேண்டும் எனவும் கூறி தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறையில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அமுதன் ,பேரறிவாளன், நளினி மற்றும் முருஜன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்கான குரல்கள் தமிழகமெங்கும் ஒருமித்தமாக எழுந்துள்ள நிலையில் சீமானின் இந்த பேச்சு அவர்கள் விடுதலைக்கு ஏதேனும் பங்கம் விளைவிக்குமோ என்றும் சமூக வலைதளங்கலில் குரல்கள் எழுந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீரை அடுத்து அயோத்தியிலும் கெடுபிடி! என்ன நடக்க போகிறது?