Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

J.Durai

, வியாழன், 16 மே 2024 (18:26 IST)
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பின். பெங்களூரை சேர்ந்த காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் எஸ்.எஸ். பிரகாசம் தலைமையில் பொங்களூரில் இருந்து தொடங்கும் வாகன ஜோதி பயணம் கேரளா வழியாக கன்னியாகுமரி வந்து.கன்னியாகுமரியில் உள்ள பெரும் தலைவர் காமராஜர் நினைவு மண்டபத்தில் ஜோதியை வைத்து அஞ்சலி செலுத்திய பின், கன்னியாகுமரி- ஸ்ரீபெரும்புதூர் ஜோதி யாத்திரை சென்று ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் ராஜீவ் காந்தி ஜோதியை வைத்து அஞ்சலிக்கு பின். பெங்களூர் பயணக்குழுவினர் டெல்லி செல்வது வழக்கம். 
 
ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின் ஒவ்வொரு நினைவாண்டும் இந்த ஜோதி பயணம் நடைபெற்று வந்தது. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் தடைபட்டது. 
 
இந்த தடைக்கு பின் இரண்டு ஆண்டுகள் எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில் தொடர்ந்தது.எஸ்.எஸ்.பிரகாசத்தின் மரணத்திற்கு பின் தொடராத நிலையில்.
 
கடந்த 2023ம் ஆண்டில். இன்றைய சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலரும் தென் சென்னை மாவட்ட தலைவருமான எம்.எஸ். திரவியம் என்பவர் தலைமையில்.கன்னியாகுமரி ராஜீவ் காந்தியின் சிலை முன் இருந்து தீப வாகன பயணம் சென்ற நிலையில்.ராஜீவ்காந்தியின் 33 -வது நினைவு தினத்தை நினைவு கூறும் வகையில் இந்த யாத்திரை என அறிவித்தனர்
 
இந் நிலையில் கன்னியாகுமரி ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து சிலையின் முன்பிருந்து இயற்றிய தீபத்துடன். வாகனத்திற்கு கட்சியினருடன் வந்த எம்.எஸ்.திரவியம். மாநில தலைவர் செலவபெரும்தகை வெளியிட்டுள்ள கடிதத்தால், தொடங்கிய இடத்திலே இந்த தீப யாத்திரையை முடித்துக் கெள்வதாக சொன்ன நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.திரவியம், மாநில தலைவர் வெளியிட்டுள்ள கடிதத்தை காண்பித்ததுடன். 
 
தீப வாகனப் பயணமும் தொடங்கிய இடத்தில் முற்று பெற்றது.
 
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெரும்தகையிடம்.  கை பேசியில் அவரது குறிப்பிட்ட கடிதம் பற்றி கேட்டபோது.
 
இந்த ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட வாகன பயணம் மட்டும் அல்ல. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து இத்தகைய பயணங்கள் நடப்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அனுமதிக்கவில்லை.
 
தலைவர் ராஜீவ் காந்தியின் ஆன்மா அமைதியாக துயில் கொள்ளும்  ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தின் அமைதியை காக்கவும் இத்தகைய நிகழ்ச்சிகள் வேண்டாம் என்பதின் தகவல் கடிதம் வெளியிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!