Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோவிலுக்கு கல் எடுக்க அனுமதி நஹி! – தடை போட்ட ராஜஸ்தான்!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (16:51 IST)
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பிங்க் நிற கற்களை வெட்டியெடுக்க ராஜஸ்தான் அரசு அனுமதி அளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட ஆண்டுகளாக நடந்து வந்த அயோத்தி வழக்கில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் கோவில் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ராமர் கோவில் கட்டுமானத்தை ராஜஸ்தானில் கிடைக்கும் பிங்க் நிற கற்களை கொண்டு கட்ட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ராஜஸ்தானில் பிங்க் நிற கற்களை வெட்டி எடுக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. ராஜஸ்தானில் பிங்க் நிற கற்களை வெட்டியெடுக்க யாருக்கும் சட்டப்பூர்வமான ஒப்பந்தமோ, அனுமதியோ அளிக்கவில்லை என ராஜஸ்தான் அரசு கூறியுள்ளது.

ஆனால் ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் விரோத போக்குடன் இது போன்ற தடைகளை விதிப்பதாக பாஜக வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments