Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயிருக்கு பயந்து பாஜகவில் இணைந்தேன்!? – மதுரை சலூன் கடைக்காரர்

Advertiesment
Tamilnadu
, புதன், 9 செப்டம்பர் 2020 (13:55 IST)
பிரதமர் மோடியால் புகழப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் தற்போது பாஜகவில் இணைந்துள்ள நிலையில் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்புகளின் போது மக்களுக்கு உதவ தனது மகளின் படிப்புக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை அளித்தவர் மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன். இதற்காக மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவரை பாராட்டிய நிலையில் மதுரை பாஜகவினர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினர். அப்போது அவர் பாஜகவில் இணைந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தான் பாஜகவில் இணையவில்லை என்று மோகன் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மோகன் மற்றும் அவரது மனைவி பாஜகவில் இணைந்துள்ளனர். ஆரம்பத்தில் தான் எந்த கட்சியும் சாராதவன் என மோகன் கூறியிருந்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில் தனது உயிருக்கு சிலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி பாஜகவில் இணைந்துள்ளதாக மோகன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா குறையாத ஒரே நாடு இந்தியா தான்: டாக்டர் ராமதாஸ்