Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஷ்டத்துக்கு செயல்பட வேண்டாம்! – கேட் போட்ட ரஜினி மக்கள் மன்றம்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (16:00 IST)
தமிழக தேர்தல் நெருங்கும் வேளையில் ரஜினி அரசியல் வரவு குறித்து போஸ்டர் ஒட்ட வேண்டாம் என நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக தயாராகி வருகின்றன. இந்நிலையில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கான திட்டத்தில் இருந்தாலும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் வெளியிடாமல் உள்ளார்.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் பலர் ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி வருவது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகி சுதாகர் மாவட்ட நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

அதன்படி தலைமையில் இருந்து உத்தரவு வரும் வரை போஸ்டர் அடிப்பது போன்ற செயல்களில் தன்னிச்சையாக ஈடுபட வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸப் க்ரூப்! - தமிழ்நாடு ரயில்வே போலீஸ் அசத்தல் நடவடிக்கை!

அடுத்த கல்வியாண்டு முதல் 9 - 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: சி.பி.எஸ்.இ.

GPU உருகிடுச்சு.. விட்ருங்க சாமீ..! - Ghiblify மோகத்தால் கண்ணீர் விட்டு கதறிய சாட்ஜிபிடி CEO!

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments