Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே எஸ்எம்எஸ்: சிக்கலில் சிக்கிய இந்தியன் ரயில்வே!!

ஒரே எஸ்எம்எஸ்: சிக்கலில் சிக்கிய இந்தியன் ரயில்வே!!
, வியாழன், 23 நவம்பர் 2017 (19:27 IST)
இந்தியன் ரயில்வே பயணி ஒருவருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பியதால் ரூ.25,000 நஷ்ட ஈடு செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 
 
அலகாபாத்தில் வசித்து வரும் விஜய் பிரதாப் சிங், தனது மகமுடன் அலகாபாத்தில் இருந்து டெல்லி பயணிக்க வேண்டி இருந்தது. இதற்காக 29 ஆம் தேதி மகாபோதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார்.
 
இந்நிலையில், பயண நாளுக்கு முன்னதாக ஐஆர்சிடிசி-யில் இருந்து ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதாப் சிங் மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. 
 
அந்த சமயத்தில் வேறு ரயில்கள் இல்லாத காரணத்தால், தனியார் டாக்ஸி மூலம் டெல்லி சென்ற்ள்ளனர். ஆனால், பின்னர்தான் ஐஆர்சிடிசி-யில் இருந்து வந்தது தவறான தகவல் என்று தெரியவந்துள்ளது. 
 
பிரதாப் சிங், அலகாபாத் ரயில்வே அலுவலகத்தை அணுகியபோது, அதிகாரிகள் சரியான முறையில் அவருக்கு பதிலளிக்கவில்லை. இதனால் மன உலைச்சளுக்கு ஆளான அவர் டெல்லி நுகர்வோர் ஆணையத்திடம் புகார் அளித்தார். 
 
அந்த புகாரில், தவறான குறுஞ்செய்தியால் தனக்கு கடும் மன உளைச்சலும், வீண் பணச்செலவும் ஏற்பட்டுள்ளதற்கு ரயில்வே நிர்வாகம் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். 
 
வழக்கை விசாரித்த டெல்லி நுகர்வோர் ஆணையம் ரயில்வே நிர்வாகம் 25,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணம் ஆகவில்லை என்பதை நிரூபிக்க 7 வருடம் போராடிய நடிகை