Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவுக்கு 51 சிறப்பு ரயில்கள் - ரயில்வே அறிவிப்பு!!

கேரளாவுக்கு 51 சிறப்பு ரயில்கள் - ரயில்வே அறிவிப்பு!!
, புதன், 21 டிசம்பர் 2022 (12:37 IST)
வரும் கிறிஸ்மஸ் - புத்தாண்டு சீசனில் பயணிகளின் கூடுதல் கூட்டத்தை கருத்தில் கொண்டு கேரளாவிற்கு 51 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு 17 சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வேயால் அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களைத் தவிர, மற்ற மண்டல ரயில்வே கேரளாவிற்கு மொத்தம் 34 சேவைகளை அறிவித்துள்ளது. தெற்கு மத்திய ரயில்வேயின் 22 சிறப்பு ரயில்கள், தென்மேற்கு ரயில்வேயின் எட்டு சிறப்பு ரயில்கள் மற்றும் கிழக்கு கடற்கரை ரயில்வேயின் நான்கு சிறப்பு ரயில்கள் இதில் அடங்கும்.

இதன் மூலம், கிறிஸ்துமஸ்/புத்தாண்டு சீசனில் கேரள மாநிலத்திற்கு மொத்தம் 51 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் டிசம்பர் 22, 2022 முதல் ஜனவரி 2, 2023 வரையிலான காலகட்டத்தில் இயக்கப்படும்.

முன்னதாக, திருவனந்தபுரம் எம்.பி., சசி தரூர், சீசனில் அதிக ரயில்களுக்கான மக்களின் கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை என்றும், இந்த விஷயத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலையிட வேண்டும் என்றும் விமர்சித்திருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடபழனி முருகன் கோயிலில் 2 பேர் சஸ்பெண்ட்: அமைச்சர் சேகர்பாபு அதிரடி நடவடிக்கை