கொரொனா தாக்கத்தால் நான்காம் கட்ட ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஏற்கனவே வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். ஒருசில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஏசியில்லாத 200 ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும்,இந்த ரயில்கள் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ரயில்களை ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று அவர் கூறினார். இந்த ரயில்கள் அனைத்தும் ஏசியில்லாத 2ம் ஆம் வகுப்பு பெட்டிகலை கொண்டிருக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.