இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதே தீர்வு என ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் மாநில அளவில் வெவ்வேறு வகையில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வீரியமடைந்துள்ள நிலையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் பலர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதுதான் ஒரே தீர்வு. ஊரடங்கின்போது குடும்பங்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு குறிப்பிட்ட தொகை அளிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.