கேரள மாநிலம், பாலக்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கேரள இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவருமான ராகுல் மம்கூட்டத்தில், நடிகையும் முன்னாள் பத்திரிகையாளருமான ரினி ஆன் ஜார்ஜ் மற்றும் எழுத்தாளர் ஹனி பாஸ்கரன் ஆகியோர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகார்களை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நடிகை ரினி ஆன் ஜார்ஜ், ஒரு முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த இளைஞர் தலைவர் ஒருவர் தனக்குத் தொடர்ந்து ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகவும், ஹோட்டலுக்கு அழைத்ததாகவும் குற்றம் சாட்டினார். அவரது நடத்தையை அறிந்திருந்தும், கட்சித் தலைவர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் கூறினார்.
ரினி ஆன் ஜார்ஜ் யாரையும் நேரடியாகப் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும், பாஜகவினர் ராகுல் மம்கூட்டத்திலின் அலுவலகத்திற்கு முன் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் தனது ராஜினாமாவை அறிவித்த மம்கூட்டத்தில, தான் எந்த தவறும் செய்யாத போதிலும், கட்சி தனது பணியில் கவனம் செலுத்துவதற்காக பதவி விலகுவதாகத் தெரிவித்தார். அவரது ராஜினாமா காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.