Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்: அசாம் முதல்வர்..!

Siva
வியாழன், 25 ஜனவரி 2024 (07:22 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணம் அசாம் மாநிலம் சென்றபோது அங்குள்ள கல்லூரி ஒன்றில் ராகுல் காந்தி செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியின் திடீரென போராட்டம் நடத்தினர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அசாம் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. 
 
இது குறித்து அசாம் முதல்வர்  ஹிமந்த பிஸ்வ சர்மா கூறிய போது மக்களை வன்முறை செயலுக்கு ராகுல் காந்தி தூண்டுவதாக குற்றம் காட்டினார். மேலும் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக கூறினார்.
 
மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்றும் இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்! மத்திய அரசு

இந்தியா எடுத்த ஒரு சின்ன முயற்சி.. ₹8.5 லட்சம் கோடி முதலீடு, 10 லட்சம் வேலைவாய்ப்புகள்

இந்தியாவுடன் ஏற்பட்ட புதிய நட்பு.. பாகிஸ்தானை கைவிரித்தது சீனா.. முக்கிய திட்டம் ரத்து..!

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லவே இல்லை: பிரேமலதா

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவை வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments