சமீபத்தில் டென்மார்க் அதிகாரி ஒருவரோடு பிரதமர் மோடி உரையாடிய வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்து ராகுல் காந்தி பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
சமீபத்தில் டென்மார்க் அதிகாரி ஒருவரோடு வீடியோ கான்பரன்ஸ் வழியாக உரையாடிய பிரதமர் மோடி காற்றாலை மூலமாக தூய நீர் உற்பத்தி செய்வது குறித்து அவருடன் உரையாடினார்.
பிரதமர் பேசியதற்கு பதிலளித்த டென்மார்க் அதிகாரி “நீங்கள் இதன் மீது மிக ஆர்வமாக இருக்கிறீர்கள். நீங்கள் கண்டிப்பாக டென்மார்க் வந்து இங்குள்ள என்ஜினியர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்” என்று கூறினார். அதற்கு மோடி சிரித்தார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி “இந்தியாவிற்கு மிகப்பெரும் ஆபத்தே பிரதமருக்கு எதுவும் புரிவதில்லை என்பதல்ல. சுற்றியிருப்பவர்களும் அவருக்கு அதை சொல்ல தைரியம் இல்லாமல் இருப்பதுதான்” என கூறியுள்ளார்.
அவரது இந்த பதிலுக்கு பிரதமர் பேசிய காற்றாலை தொழில்நுட்பம் உண்மையானதுதான் என அது தொடர்பான செய்திகளை கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.