Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை காப்பாற்ற அதிமுகவினர் சதி: ராகுல் காரசார விளாசல்

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (18:43 IST)
புத்தாண்டுக்கு பிறகு பாராளுமன்றம் இன்று கூடியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எப்போது வாய்ப்புக்கிடைக்கும் என காத்திருந்தது போல இன்று காரசாரமாக மோடியையும் அதிமுகவையும் விளாசி தள்ளினார். 

 
ராகுல் கூறிய சில விமர்சங்கள் பின்வருமாறு, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்ல தைரியம் இல்லாமல் பிரதமர் மோடி அவைக்கு வராமல் தனது அறைக்குள் பதுங்கி கொண்டுள்ளார். 
 
தனது நண்பர் அனில் அம்பானிக்கு உதவி செய்வதற்காகவே ரபேல் கொள்முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்தை மோடி நுழைத்து விட்டார். மேலும், காவிரி பிரச்சனையை மையமாக வைத்து அவையில் அமளியில் ஈடுபட்டு அதிமுகவினர் ரபேல் விவகாரத்தில் இருந்து மோடியை காப்பாற்றி வருகின்றனர் என நேரடியாக விமர்சித்தார். 
 
அதோடு, ரபேல் கொள்முதல் விவகாரம் தொடர்பான பல முக்கிய கோப்புகள் இன்னும் தனது வீட்டில் இருப்பதாக முன்னாள் ராணுவ மந்திரியும், தற்போதைய கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் பேசிய ஆடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அதை அவையில் போட்டுக்காட்ட அனுமதியும் கோரினார் ஆனால் அதர்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments