Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு இலவச பேருந்து சேவை உள்பட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: ராகுல் காந்தி..

Webdunia
சனி, 20 மே 2023 (14:08 IST)
கர்நாடக மாநிலத்தில் இன்று முதல்வராக சித்தராமையா பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அவர் இந்த பதவி ஏற்பு விழாவில் பேசியபோது கர்நாடக மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வாக்குறுதி உள்பட அனைத்து வாக்குறுதிகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என கூறினார்,.
 
 கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் இன்று முதல்வராக சித்தராமையா துணை முதல்வராக டிகே சிவகுமார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட 6 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். 
 
இந்த நிலையில் இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசிய போது, ‘கர்நாடகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை, பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகை, 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2000 உரிமைத் தொகை, 10 கிலோ இலவச அரிசி ஆகிய 5 முக்கிய வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments