Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2 ஆயிரம் நோட்டு என்பது ஒரு சலுகை அல்ல...மக்களை ஏமாற்றும் செயல் -மம்தா பானர்ஜி

Webdunia
சனி, 20 மே 2023 (14:06 IST)
2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்த   நிலையில், மேற்கு வங்க முதல்வர் இதற்கு கருத்து தெரிவித்துள்ளார். 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.   கறுப்பு பணத்தை  ஒழிக்கும் நடவடிக்கையாக, கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடம் 2000 ரூபாய் நோட்டு வழக்கத்தில் இல்லாத நிலையில் நேற்று திடீரென 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் மக்கள் தங்களிடமுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தது.

இதற்கு   நாடு முழுவதிலும் உள்ள பல அரசியல்வாதிகள் , எதிர்க்கட்சி தலைவர்கள்  கருத்துக்கள்  கூறி வருகின்றனர். இந்த நிலையில்,  மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி இதுகுறித்து கூறியுள்ளதாவது:

''பணமிழப்பின்போது நாம் எதிர்கொண்ட கஷ்டங்கள் மறக்க முடியாதவை….அந்த கஷ்டத்திற்குக் காரணமானவர்ளை மன்னிக்கக்கூடாது.  ரூ.2 ஆயிரம் நோட்டு என்பது ஒரு சலுகையன்று , அது கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல்…மக்களே விழித்துக் கொள்ளுங்கள் ''என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments