இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000, 200 யூனிட் இலவச மின்சாரம்: கர்நாடகாவில் ராகுல் காந்தி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (11:27 IST)
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ராகுல் காந்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என்றும் அது மட்டுமின்றி வீடுகளுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.
 
கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே பெண்களுக்கு இலவச பேருந்து சலுகை அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் தற்போது அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ரூபாய் 2000, வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 3000 என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments