Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் தலைவராக தலித் – ராகுல் காந்தியின் அடுத்த கண்டீஷன் !

Webdunia
வியாழன், 30 மே 2019 (13:17 IST)
காங்கிரஸீன் அடுத்த தலைவராக தலித் அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென ராகுல் காந்தி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து காங்கிரஸின் காரிய கமிட்டி கூடிய போது கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார்.  

இதை சற்றும் எதிர்பாராத காரிய கமிட்டியினர் ராகுல் ராஜினாமா செய்யக்கூடாது என்றும், தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு அவரது ராஜினாமாவை நிராகரித்தனர். அதோடு ராகுலை சந்தித்து சமாதானம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

ஆனால் ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸுக்கு நேரு குடும்பத்தில் இல்லாத ஒருவரைத் தலைவராக்க வேண்டும் எனவும் கூறியதாக காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்லப்பட்டது. இப்போது காங்கிரஸுக்குத் தலைவராக தலித் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரைத் தலைவராக்க வேண்டும் என ராகுல் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments