ராகுல் காந்தி என்ற இளம் தலைவரை தலைவராக கொண்ட காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை மக்களவை தேர்தலில் பெற்றுள்ளது. 13 மாநிலங்களில் இக்கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை என்பது மோசமான சாதனைகளில் ஒன்றாகும். தோல்விக்கு காரணம், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் ராஜதந்திரம் ராகுலிடம் இல்லாததே என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் காங்கிரஸ் தோல்விக்கான காரணங்கள் குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் டிவி விவாதங்களில் விவாதித்து வருவது அக்கட்சிக்கு மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது. எனவே டிவி விவாதங்களில் கலந்து கொள்ள செய்தி தொடர்பாளர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அதிரடியாக தடை விதித்துள்ளது
இதனையடுத்து இன்னும் சில மாதங்களுக்கு தமிழ் உள்பட இந்தியாவின் முன்னணி மொழி சேனல்கள் நடத்தும் அரசியல் விவாதங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது