Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் ஜெயித்தாலும் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும்; ராகுல் காந்தி எச்சரிக்கை..!

Advertiesment
காங்கிரஸ் ஜெயித்தாலும் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும்; ராகுல் காந்தி எச்சரிக்கை..!
, திங்கள், 17 ஏப்ரல் 2023 (12:56 IST)
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 150 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்றும் குறைவான தொகுதிகள் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும் பாஜக வெற்றியை பறித்துக் கொள்ளும் என்றும் ராகுல் காந்தியை எச்சரிக்கை வைத்துள்ளார் 
 
கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு தற்போது ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் தொண்டர்களிடம் பேசிய போது ’கர்நாடகத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என நான் உணர்கிறேன். 
 
ஆனால் அதே சமயம் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் குறைந்தபட்சம் 150 தொகுதிகளில் வெல்ல வேண்டும். ஏனெனில் பாஜகவிடம் நிறைய பணம் இருக்கிறது, ஒரு வேளை குறைவான சீட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் ஊழல் கட்சியான பாஜக மக்களின் வெற்றியை திருடி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும் என்றும் அவர் எச்சரிக்கை செய்தார். 
 
வன்முறையை தூண்டியும் வெறுப்பு பேச்சினாலும் பாஜக இந்த தேசத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1,000 ரூபாயாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி..!