கர்நாடக மாநில தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததை அடுத்து பாஜக எம்எல்ஏ ஒருவர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த மாதம் பத்தாம் தேதி கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து இந்த தேர்தலை சந்திக்க ஆளும் பாஜக மற்றும் எதிர்கட்சி காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன
மேலும் இரண்டு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஜகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததை அடுத்து கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் மற்றும் எம்எல்ஏ ஜெகதீஷ் ஷெட்டர் பாஜக கட்சியில் இருந்து விலகி உள்ளார்.
அவர் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது