பிஹார் தேர்தல் பிரசாரத்தின்போது, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு இடையே கடும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
'இந்தியா' கூட்டணியை சாடிய யோகி ஆதித்யநாத், ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோரை மகாத்மா காந்தியின் "மூன்று குரங்குகள்" என்று மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சித்தார். இவர்கள் வளர்ச்சியை ஏற்க மறுப்பதாகவும், சாதி அரசியல் மூலம் மாஃபியா ஆட்சியை மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ், பாஜக முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்பவே இந்த 'குரங்குகள்' பற்றி பேசுவதாகக் குற்றம் சாட்டினார். யோகி ஆதித்யநாத்தை நேரடியாக தாக்காமல், "உண்மையில், அவரை குரங்குகளின் கூட்டத்தில் அமர வைத்தால், உங்களாலோ என்னாலோ அவரை அடையாளம் காண முடியாது" என்று கூர்மையாக விமர்சித்தார்.
பிஹார் தேர்தலை முன்னிட்டு வட இந்திய அரசியலில் இந்த வார்த்தைப் போர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.