கேரள மாநிலத்தை தேசிய பேரிடர் பகுதியாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரள மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளம் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
பலர் தங்களது வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் தங்களது சார்பில் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.500 கோடி அறிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், தயவுசெய்து கேரள மாநிலத்தை தேசிய பேரிடராக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.