Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

24 மணி நேரம் இயங்கும் மருத்துவ ஆலோசனை மையம்; ராகுல்காந்தி அறிவிப்பு!

Advertiesment
24 மணி நேரம் இயங்கும் மருத்துவ ஆலோசனை மையம்; ராகுல்காந்தி அறிவிப்பு!
, சனி, 1 மே 2021 (11:49 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் இலவச மருத்துவ ஆலோசனைகளுக்கான உதவி எண்ணை ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 4 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் பல இடங்களில் மருத்துவ வசதி பற்றாக்குறையால் மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் இலவசமான மருத்துவ ஆலோசனைகளை பெற காங்கிரஸ் எம்.பி அழைப்பு எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “நமது மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைவது தற்போது இந்தியாவின் தேவை. நாங்கள் இலவச மருத்துவ ஆலோசனைக்கான எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளோம். +919983836838 என்ற இந்த எண்ணை தொடர்பு கொண்டு மருத்து ஆலோசனை பெறலாம். விருப்பமுள்ள மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் உங்களை இதில் இணைத்துக் கொள்ளுங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தடுப்பூசி 18+ திட்டம்: நரேந்திர மோதி அரசின் முயற்சி வெல்லுமா தோற்குமா?