இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எனது பெயரை தான் பிரதமர் பதவிக்கு மம்தா பானர்ஜி அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார்கள் என்றும் ஆனால் நான் ராகுல் காந்தி தான் பிரதமராக வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறேன் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கார்கே தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் கார்கே அளித்த பேட்டியில், என்னை கேட்டால் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியைத்தான் நான் தேர்வு செய்வேன், ஏனென்றால் அவர் நடத்திய 2 பாதையாத்திரை தான் இந்தியா கூட்டணியின் பிரச்சாரத்துக்கு முக்கியமானது.
மேலும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவர், மோடியை நேரடியாக எதிர்த்து தாக்கியவர், நாட்டின் இளைஞர்களின் அடையாளமாக இருக்கிறார். எனவே அவரைத்தான் பிரதமராக தேர்வு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம் என்று தெரிவித்தார்.
மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் எனது பெயரைத்தான் பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தார்கள் என்பது உண்மைதான், அதே நேரத்தில் இன்றைய கூட்டத்தின் போது நாங்கள் அனைவரும் ஆலோசனை செய்து பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்வோம் என்றும் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைவது உறுதி என்றும் இந்தியா கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்றும் ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்றும் அவர் கூறினார்.