Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நானும் அம்மாவும் வாக்களித்தோம்..! அனைவரும் வாக்களிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

Ragul Gandhi

Senthil Velan

, சனி, 25 மே 2024 (11:03 IST)
உங்கள் உரிமைகளுக்காகவும், உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
 
ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில், இன்று ஆறாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக தனது எக்ஸ்  தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, வாக்குப்பதிவின் முதல் ஐந்து கட்டங்களில், நீங்கள் பொய்கள், வெறுப்பு மற்றும் பிரச்சாரங்களை நிராகரித்து, உங்கள் வாழ்க்கை தொடர்பான அடிமட்ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்
 
இன்று ஆறாவது கட்ட வாக்குப்பதிவு உங்கள் ஒவ்வொரு வாக்கும் இதை உறுதி செய்யும் என்றும் 30 லட்சம் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மற்றும் இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதல் வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் கணக்கில் மாதம் ரூ.8,500 வரத் தொடங்கியது என குறிப்பிட்டுள்ள அவர், விவசாயிகள் கடனில் இருந்து விடுபட வேண்டும் மற்றும் அவர்களின் பயிர்களுக்கு சரியான MSP கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 400 ரூபாய் வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். உங்கள் வாக்கு உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

ஜனநாயகத்தின் இந்த மாபெரும் திருவிழாவில் நானும் அம்மாவும் வாக்களித்து பங்களித்தோம் என்றும் நீங்கள் அனைவரும் அதிக எண்ணிக்கையில் உங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து, உங்கள் உரிமைகளுக்காகவும், உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும் வாக்களிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜம்மு காஷ்மீரில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: முன்னாள் முதல்வர் சாலையில் அமர்ந்து போராட்டம்..!