Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லியில் யாத்திரையை நிறுத்திய ராகுல்: எதற்கு தெரியுமா?

டெல்லியில் யாத்திரையை நிறுத்திய ராகுல்: எதற்கு தெரியுமா?
, சனி, 24 டிசம்பர் 2022 (13:13 IST)
ஆம்புலன்சுக்கு வழிவிடுவதற்காக, பாரத் ஜோடோ யாத்திரையை அப்பல்லோ மருத்துவமனை அருகே நிறுத்தினார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணத்தை ஆரம்பித்தார் என்பதும் இந்த பயணத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ஒற்றுமை பயணம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாலிவுட் பிரபலங்கள் முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும், அதனால் இந்திய ஒற்றுமை பயணத்தை நிறுத்த வேண்டும் என மத்திய அரசு காங்கிரஸ் கட்சியை கேட்டுக்கொண்டது. ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் அவர்கள் இதுகுறித்து கூறிய போது கொரோனா குறித்த அனைத்து வழிகாட்டல்களையும் காங்கிரஸ் பின்பற்றும் என்றும் ஆனால் ஒருபோதும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறுத்தப்படாது என்று கூறினார்.

இன்று டெல்லி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை முன்னெடுத்துள்ள ராகுல் காந்தியின் நடைப்பயணமானது டெல்லியை சென்றடைந்திருக்கின்றது. டெல்லி எல்லையில் ராகுலுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆம்புலன்சுக்கு வழிவிடுவதற்காக, பாரத் ஜோடோ யாத்திரையை அப்பல்லோ மருத்துவமனை அருகே நிறுத்தினார். ஆம்புலன்ஸைக் கடந்து செல்லும் நேரம் வரை அவர் யாத்திரையை நிறுத்தினார். ஆம்புலன்சுக்கு வழிவிடுமாறு சக யாத்ரிகளையும் கேட்டுக் கொண்டார்.

இந்த யாத்திரை டெல்லியில் 23 கிமீ தூரம் பாதர்பூர் எல்லையில் தொடங்கி செங்கோட்டை அருகே முடிவடையும். இது ஆஷ்ரம் சௌக், நிஜாமுதீன், இந்தியா கேட், ஐடிஓ, செங்கோட்டை மற்றும் ராஜ் காட் வழியாக செல்லும் யாத்திரை செங்கோட்டைக்குச் செல்வதற்கு முன், ஆசிரம சௌக்கில் இரண்டு மணி நேர இடைவெளி எடுத்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனவரி 3ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!