காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி மாற்றப்படும்: ராகுல்காந்தி

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (07:25 IST)
வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல்  வரும் வாய்ப்பு இருப்பதால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தற்போதே தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்.

நேற்று மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி, 'காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜிஎஸ்டி வரிவிகித முறை மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தார். ராகுல்காந்தியின் இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் வேலியே பயிரை மேய்ந்தது போல் பிரதமர் மோடியின் செயல்பாடு இருப்பதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார். முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் முன் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காம்தா நாத், ராமர் கோவில்களுக்கு சென்று ராகுல்காந்தி வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments