Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம்.. பிளாக் பெல்ட்.. நீச்சல் பயிற்சி - ராகுல் கலகல பேட்டி

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (16:42 IST)
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட் பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது.


 

 
டெல்லியில் முனைவர் பட்டம் பெற்ற அறிஞர்களுக்கான மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் ராகுல்காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சில சுவாரஸ்யான கேள்விகள் எழுப்பப்பட்டன. அவரும் அதற்கெல்லாம் பதிலளித்தார். 
 
குறிப்பாக பிரபல குத்து சண்டை வீரர் விஜேந்திரசிங் அவரின் இரண்டு கேள்விகளை எழுப்பினார். முதல் கேள்வியாக, ‘உங்கள் திருமணம் எப்போது? அதற்காக ஏராளமானோர் காத்திருக்கிறார்கள் தெரியுமா?’ என கேட்டார். 
 
அதற்கு பதிலளித்த ராகுல்  ‘இது மிகவும் பழைய கேள்வி. ஆனாலும், பதில் சொல்கிறேன். என் திருமணம் கண்டிப்பாக நடக்கும். ஆனால் எப்போது எனத் தெரியாது. அதுவரை அனைவரும் பொறுத்திருங்கள்’ என சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
 
அடுத்து நீங்கள் விளையாடுவீர்களா எனக் கேட்டார், அதற்கு  ‘நான் தினமும் நீச்சல் பயிற்சி செய்வேன். மேலும், ஜப்பானின் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறேன். அதை தொடர்ந்து செய்து வருகிறேன்’ எனக் கூறினார். 
 
அதுபற்றிய வீடியோவை வெளியிடுமாறு விஜேந்தர் கோரிக்கை வைக்க ‘கண்டிப்பாக, விரைவில் வெளியிடுகிறேன்’ என ராகுல் காந்தி பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments