நாட்டில் மோடி அலை மங்கிப் போய்விட்டது, இனி நாட்டை வழிநடத்தும் தகுதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்குதான் உள்ளது என பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத் கூறியுள்ளார்.
சிவசேனா பாஜகவுடன் வெகு காலமாக கூட்டணியில் இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையிலும் சிவசேனா இடம்பெற்றுள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிவசேனா பிரதமர் மோடியை விமர்சிப்பது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் சிவசேனாவின் மூத்த தலைவர் எம்.பி சஞ்சய் ராவுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது:-
மோடி அலை கடந்த 2014ஆம் ஆண்டுதான் இருந்தது. இப்போது மோடி அலை என்பது மங்கிப் போய்விட்டது. குஜராத்தில் பாஜக மிகப் பெரிய சவலை சந்திக்க இருக்கிறது. நாட்டை வழி நடத்தக்கூடிய தகுதி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்குதான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கருத்துக்கணிப்பில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சஞ்சய் ராவுத் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.