Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் அழிகிறது: ராகுல் டிவிட்!

Advertiesment
பாஜக ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் அழிகிறது: ராகுல் டிவிட்!
, வியாழன், 21 ஜூன் 2018 (16:27 IST)
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அருண் ஜெட்லி வருத்தம் தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில், இவை அனைத்திற்கு சேர்த்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா செய்துள்ளார். 
 
இது தனக்கு வருத்தத்தை தருவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து இருக்கிறார். சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்டு, தற்போது ஓய்வில் இருக்கும் நமது நிதியமைச்சர் வீட்டில் இருந்தபடியே பிரேக்கிங் செய்திகளை கொடுத்து வருகிறார்.
 
இந்திய பொருளாதாரத்தின் சாவியை பாஜக பொருளாளர் வைத்திருக்கிறார். நாட்டில் என்ன நடக்கிறது என்றே மக்களுக்கு தெரியவில்லை. பாஜக எனும் கப்பல் வேகமாக மூழ்கி வருகிறது. அதில் இருந்து திறமையானவர்கள் தப்பித்து வருகிறார்கள். 
 
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கையில் இருக்கும் பாஜக எனும் கப்பல், விரைவில் பாறைகளில் மோதி உடையப்போகிறது. அதன் கேப்டன் மோடி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களுக்காகத்தான் அரசாங்கத்திற்காக இல்லை; அடித்து சொல்லும் ஜெயக்குமார்