மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார்
நேற்று மணிப்பூரிலிருந்து யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கிய நிலையில் மணிப்பூர் போர் நினைவிடத்தில் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசினார்
ஜூன் 29ஆம் தேதிக்கு பின்னர் மணிப்பூர் மணிப்பூராக இல்லை என்றும் எங்கும் வெறுப்பு பரவி இருக்கிறது என்றும் மணிபூர் மக்கள் பல இழப்பினை சந்தித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் கண்ணோட்டத்தில் மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி பிரதமர் மோடி மணிப்பூர் மக்களின் கண்ணீரை துடைக்க ஏன் வரவில்லை என்றும் தெரிவித்தார்.
பாஜகவின் கண்ணோட்டம் மற்றும் சித்தாந்தத்தின் படி மணிப்பூர் வெறுப்பின் சின்னமாக இருக்கிறது என்றும் ஆனால் நாங்கள் உங்களது காயத்துக்கு மருந்து வைப்போம் என்றும் உங்களுக்கு நாங்கள் அன்பை திருப்பி தருவோம் என்றும் தெரிவித்தார்.