இந்திய ரூபாயை 35 நாடுகளில் இனி பயன்படுத்தலாம் என்றும் அந்தந்த நாட்டின் பணத்தையோ அல்லது அமெரிக்க டாலரையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் டெல்லியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பேசியுள்ளார்.
இந்திய ரூபாயின் 100 ஆண்டுகால பயணம்" என்ற தலைப்பில் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்றார். இதில் அவர் பேசியபோது, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ரூபாயின் மதிப்பு ஸ்திரமாக உள்ளது என்றும் நமது ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்த இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த 35 நாடுகளுக்கு பயணம் செய்வோர் அந்தந்த நாட்டின் பணம் அல்லது அமெரிக்க டாலரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்திய ரூபாயை நேரடியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு முக்கியமான மைல்கல் என்றும், இது இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தும் என்றும், இது இந்தியாவுக்கும் அந்த 35 நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.