Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்கிம்பூர் செல்ல ராகுல், பிரியங்கா காந்திக்கு அனுமதி! – உத்தரபிரதேச அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (14:06 IST)
விவசாயிகள் இறந்த லக்கிம்பூர் பகுதிக்கு செல்ல ராகுல்காந்தி, பிரியங்கா காந்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் மத்திய அமைச்சர் பயணம் செய்தபோது அணிவகுத்த கார் அங்கு போராடிய விவசாயிகளை மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காண சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து லக்கிம்பூர் செல்ல அனுமதி கேட்ட ராகுல்காந்திக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் விவசாயிகள் உயிரிழந்த லக்கிம்பூர் கேரி பகுதிக்கு செல்ல ராகுல்காந்தி, பிரியங்கா காந்திக்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது. அனுமதியை தொடர்ந்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவுக்கு ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் ஆகியோர் புறப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments