Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை இந்தியாவில் இருந்து இங்கிலாந்து கொண்டு சென்ற நபர்.. நெட்டிசன்கள் ரியாக்சன்..!

Siva
வியாழன், 12 ஜூன் 2025 (14:12 IST)
பொதுவாக ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு வீட்டை மாற்றினால் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் எடுத்து சொல்வது வழக்கமானது தான். ஆனால் பெரும்பாலும் வெளிநாட்டுக்கு செட்டிலாக செல்பவர்கள் பொருட்களை விற்பனை செய்துவிட்டு முக்கிய பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்வார்கள். ஆனால் பஞ்சாபி சேர்ந்த ஒருவர் தனது சோபா செட், ராயல் என்ஃபீல்டு பைக் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கொண்டு சென்றதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒரு பஞ்சாபி குடும்பம் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கும், வீட்டுச் சாமான்களும் அனுப்ப 4.6 லட்சம் ரூபாய் செலவழித்தது குறித்து ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
 
இந்த வீடியோ முதலில் டிக்டாக்கில் பகிரப்பட்டது. பின்னர்  இன்ஸ்டாகிராமிலும் வைரலாகியது. இந்த வீடியோ குறித்து , "ஒருவர் தன் வீட்டையே தன் புதிய வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்!" என்று கூறியுள்ளார். இதில் பஞ்சாப் பதிவு எண் கொண்ட புல்லட் பைக்கை கண்டெய்னரில் இருந்து இறக்குவதை காணலாம். பைக்குடன் சேர்ந்து, சோபா செட், டைனிங் டேபிள், கட்டில்கள் உள்ளிட்ட சாமான்களும் அனுப்பப்பட்டுள்ளன.
 
பைக் உரிமையாளர் ராஜ்குரு இதுகுறித்து கூறியபோது, ‘இந்த பொருட்கள் இந்தியாவின் கர்த்தார்பூரில் இருந்து எடுத்து அனுப்பப்பட்டுள்ளன. இந்திய பொருட்களின் தரம் மிகச் சிறந்தது என்பதால்தான் இவ்வாறு முடிவெடுத்ததாகவும், அவரது குடும்பம் இங்கிலாந்தில் நிரந்தரமாக குடியேற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த வீடியோ 3.9 மில்லியன் பார்வைகளும், 2.4 லட்சம் லைக்குகளும் பெற்றுள்ளது. பலரும் புல்லட் பைக்கின் முக்கியத்துவம் மற்றும் உணர்வுகளைப் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by UB1UB2: Southall, West London (@ub1ub2)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: ஆம் ஆத்மி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

மாலை நேரத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களை டார்கெட் செய்த மழை!

நாங்க சுந்தரா ட்ராவல்ஸ் இல்ல.. உங்கள முடிச்சு விடப் போற ட்ராவல்ஸ்! - திமுகவிற்கு ஆர்.பி.உதயக்குமார் பதில்!

இலங்கையில் 65 சிறுமிகளின் உடல் தோண்டியெடுப்பு.. எலும்புக்கூடு அருகே பள்ளி பைகள், பொம்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments