Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்டா பெண் பிரபலம் காரில் மர்ம மரணம்.. 2 நாட்களுக்கு பின் பிணம் கண்டுபிடிப்பு..!

Siva
வியாழன், 12 ஜூன் 2025 (14:02 IST)
பஞ்சாபில் உள்ள பட்டிண்டா அருகேயுள்ள ஆதேஷ் மருத்துவப் பல்கலைக்கழக வாகன நிறுத்துமிடத்தில், சமூக வலைத்தள பிரபலமான கமல் கவுர் என்ற 30 வயது பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த பகுதியில் சென்றவர்கள் காரின் பின்புற இருக்கையில் இருந்து துர்நாற்றம் வீசியதாக போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வந்த போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்தை பரிசோதித்த போது, காரில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பது தெரியவந்தது. பின்னர், அவர் இன்ஸ்டாகிராமில் 3.83 லட்சம் பின்தொடர்பவர்கள் கொண்ட கமல் கவுர் என அடையாளம் காணப்பட்டார்.
 
கமல், ஜூன் 9ஆம் தேதி பட்டிண்டாவில் ஒரு விளம்பர நிகழ்ச்சிக்கு செல்கிறேன் என சொல்லி வீட்டில் இருந்து கிளம்பியிருந்தார். ஆனால் அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தொடர்பும் கிடைக்கவில்லை.
 
இந்த மர்ம மரணம் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகளில், ஒருவரால் அந்த கார் ஓட்டப்பட்டதும், பின்னர் அவர் நடந்து செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
 
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவியுள்ளது. காரணம், பலரால் விரும்பப்பட்ட கமல் கவுர் திடீரென இவ்வாறு உயிரிழந்தது என்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் முக்கிய தடுப்பூசி.. அரசின் அதிரடி முடிவு..!

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்யின் முதல் புகைப்படம்.. பரபரப்பு தகவல்..!

நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை: கொலையான மஹ்தியின் சகோதரர் கருத்து..!

சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென பரவும் காட்டுத்தீ- பக்தர்கள் செல்ல தடை

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments