Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தான் கொடி வாங்கினால் லைட்டர் இலவசம்: அசத்திய கடைக்காரர்

பாகிஸ்தான் கொடி வாங்கினால் லைட்டர் இலவசம்: அசத்திய கடைக்காரர்
, திங்கள், 18 பிப்ரவரி 2019 (06:11 IST)
பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்பு ஒன்று சமீபத்தில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலால் 44 சி.ஆர்.பி.எப் வீர்ர்கள் பலியான சம்பவம் இந்திய மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளதோடு, இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஒவ்வொரு இந்தியரும் ஆவேசமாக குரல் கொடுத்து வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் கொடிகள் ஆங்காங்கே எரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புனேவில் பாகிஸ்தான் கொடி விற்கும் முருதுகர் ஜீந்தாவாலே என்ற கடைக்காரர் ஒருவர் பாகிஸ்தான் கொடியை வாங்கினால் ஒரு லைட்டர் இலவசம் என்ற போர்டு வைத்துள்ளார். இவருடைய கடையில் பலர் பாகிஸ்தான் கொடியை வாங்கி கடை முன்பே அந்த கொடியை எரித்து தங்களுடைய எதிர்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

webdunia
இதுகுறித்து அந்த கடைக்காரர் கூறியபோது, 'காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலை கண்டித்து பலர் பாகிஸ்தான் கொடியை எரித்து வரும் நிலையில் “கொடியை எரிக்க வசதியாக அனைவருக்கும் இலவசமாக லைட்டர் கொடுத்து உள்ளேன் என்று கூறியுள்ளார். லைட்டர் இலவசமாக கொடுப்பதால்  இந்த கடையில் நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் தேசிய கொடி விற்று தீர்ந்துள்ளதாகவும், இவரை பார்த்து  போராட்டக்காரர்களை மேலும் உற்சாகப்படுத்த புனே நகரின் பல்வேறு கடைகளில் பாகிஸ்தான் தேசியக்கொடி வாங்கினால் தீப்பெட்டி, லைட்டர் ஆகியவை இலவசமாக அளித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலசரக்கு கடை நடத்த கூட திறமை இல்லாதவர் கமல்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி