Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் கொரோனாவுக்கு பலி: புதுச்சேரியில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (07:18 IST)
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தி புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகம் உள்பட நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட விவிஐபிக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இதில் ஒரு சிலர் பலியாகி உள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் புதுவையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலன் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுச்சேரியிலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்த நிலையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலனுக்கு கடந்த 23ஆம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 
 
அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் ஆகியவை இருந்ததால் சிகிச்சையின் பலன் இன்றி இன்று அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது, புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் பலியாகி உள்ளது அக்கட்சியினர் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியாருக்கு 40 நாட்கள் பரோல்.. இது 14வது முறை..!

ராமர், சீதை, காகம் பெயர்களில் இருப்பிட சான்றிதழ்.. பீகாரில் அரசு நிர்வாகத்தின் அலட்சியம்..!

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments