Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதலமைச்சர் வீட்டுக்கு சைக்கிளில் சென்ற கவர்னர்

Advertiesment
முதலமைச்சர் வீட்டுக்கு சைக்கிளில் சென்ற கவர்னர்
, செவ்வாய், 29 மே 2018 (08:50 IST)
புதுச்சேரி முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் நாராயாணசாமி பதவியேற்றதில் இருந்தே அவருக்கும் கவர்னர் கிரண்பேடிக்கும் கருத்துவேறுபாடுகள் இருந்து வருவதும், இருவரும் மீடியா முன் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வந்ததும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்களுக்கு நாளை பிறந்த நாள். அதேபோல் புதுவை கவர்னராக கிரண்பேடி பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைகிறது. இதனையடுத்து புதுவை கவர்னர் கிரண்பேடி முதலமைச்சர் நாராயணசாமி வீட்டிற்கு சைக்கிளில் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்
 
webdunia
அதேபோல் கவர்னராக பொறுப்பேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு பெறுவதால் கிரண்பேடிக்கு நாராயணசாமியும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடுகளுடன் இருந்த முதல்வரும் கவர்னரும் இன்று ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தது ஆரோக்கியமான செயலாக பார்க்கப்படுகிறது. ஒரு மாநிலத்தில் முதல்வர், கவர்னர் இருவரும் ஒற்றுமையுடன் இருந்தால்தான் அந்த மாநிலத்தின் நலத்திட்டங்கள் சரியாக மக்களை சென்றடையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோயம்பேடு சந்தையில் ரசாயனம் தடவிய 9 டன் பழங்கள் பறிமுதல்