Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை விண்ணில் பாய்கிறது PSLV ராக்கெட்.. நெபுலாவை ஆராய கிளம்புகிறது..!

நாளை விண்ணில் பாய்கிறது  PSLV ராக்கெட்.. நெபுலாவை ஆராய கிளம்புகிறது..!
, ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (11:01 IST)
நாளை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திலிருந்து பிஎஸ்எல்வி சி 58 என்ற ராக்கெட் கிளம்பியுள்ள நிலையில் இந்த ராக்கெட் விண்ணில் நெபுலாவை ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் முதலாவது ஏவுதலத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி58 என்ற ராக்கெட் நாளை காலை 9.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. 
 
இந்த ஏவுகணை விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களை மேக கூட்டமான நெபுலா ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளதாகவும் இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட இருப்பதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  
 
ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை பார்க்க பத்தாயிரம் பேருக்கு இஸ்ரோ அனுமதி வழங்கி உள்ளதாகவும் அதில் மாணவர்கள் பலர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரில் செல்ல விரும்பும் பார்வையாளர்கள் https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில் பெயர்களை முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை! – இந்திய வானிலை ஆய்வு மையம்!