Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவால் ரூட்டை மாற்றிய பாலியல் தொழிலாளிகள்: கொட்டும் வருமானம்

Advertiesment
கொரோனாவால் ரூட்டை மாற்றிய பாலியல் தொழிலாளிகள்: கொட்டும் வருமானம்
, ஞாயிறு, 31 மே 2020 (07:33 IST)
கொரோனாவால் ரூட்டை மாற்றிய பாலியல் தொழிலாளிகள்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் வேலையில்லை என்ற காரணத்தால் அவர்கள் வறுமையில் வாடி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கொரோனாவால் மிக அதிகம் பாதிக்கப்பட்டது பாலியல் தொழிலாளிகள் தான். சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், கை குலுக்க கூட கூடாது என்ற கட்டுப்பாடு கொண்டு வரும் நிலையில் பாலியல் தொழிலாளிகளை நோக்கி வரும் வாடிக்கையாளர்கள் சுத்தமாக நின்று விட்டனர். இதனால் பாலியல் தொழிலாளிகள் வருமானம் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
இந்த நிலையில் தற்போது பாலியல் தொழிலாளிகள் தங்கள் ரூட்டை மாற்றி வருமானத்தை பெருக்கி வருகின்றனர். தங்கள் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்களுக்கு போன் செய்து வீடியோகால் மூலம்  அவர்களுடைய தேவையை போன் மூலமே பூர்த்தி செய்து வருவதாகவும் இதன் மூலம் அவர்களுக்கு வருமானம் கிடைப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
போன் பேசும்போது இரட்டை அர்த்தத்துடன் பேசுவது, கவர்ச்சி உடையுடன் தோன்றுவது ஆகியவற்றை செய்வதால் தங்களுக்கு வருமானம் கிடைப்பதாகவும், வாடிக்கையாளர்கள் இதனால் திருப்தி அடைந்து கூகுள்பே மூலம் பணத்தை அனுப்புவதாகவும் பாலியல் தொழிலாளிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது
 
ஊரடங்கு முடிந்து கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரும் வரை பாலியல் தொழிலாளர்கள் இதே போன்று  தங்கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி வருமானத்தை பெருக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெரும்பாலும் இதனை மும்பை பாலியல் தொழிலாளிகள் பயன்படுத்தி வருவதாகவும், இதனால் ரூட்டை மாற்றிய பாலியல் தொழிலாளிகளுக்கு முன்பை விட அதிக வருமானம் வருவதாகவும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சின்னத்திரை படப்பிடிப்பிற்கு இப்ப என்ன அவசரம்: கஸ்தூரி கேள்வி