சமீபகாலமாகவே உலக அளவில் பிட் காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகள் மக்களிடையே பிரபலம் ஆகிவருகின்றன. இந்நிலையில் அந்த டிஜிட்டல் கரன்சிகள் இந்தியாவில் தலையெடுக்கவும் ஆரம்பித்துள்ளநிலையில், தனியார் டிஜிட்டல் கரன்சிக்கு முற்றிலும் தடைவிதிக்க வேண்டும். அதற்கு மாறாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தினால் அபராதம் மற்றும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என அமைச்சகங்களூக்கான ஆய்வுக் குழு பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகின்றன.
அதாவது இந்த டிஜிட்டல் கரன்சிகள் உபயோகம் நடைபெறுவதால், சில கறுப்புப் பணத்தைப் போன்று டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்வது அதிகரித்துவருவதாகப் புகார்கள் எழுந்தது. ஆனாலும் கூட இந்த டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்வது உலக நாடுகள் இடையே அதிகரித்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் தான் தனியார் டிஜிட்டல் கரன்சிக்கு முற்றிலும் தடைவிதிக்க வேண்டும். அதற்கு இதற்கு மாறாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தினால் அபராதம் மற்றும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என அமைச்சகங்களூக்கான ஆய்வுக் குழு பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகின்றன. ஆனால் பிரபல வெளிநாடுகளில் பிட் காயின் புழக்கம் சில சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.